TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST தமிழ்மொழி - கூற்றும் கூறியவரும்

தமிழ்மொழி - கூற்றும் கூறியவரும்

 

தமிழ்மொழி - கூற்றும் கூறியவரும்    

❖ தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு – நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கப்பிள்ளை

❖ தமிழனென்று சொல்லடா தலைநிமிர்ந்து நில்லாட - நாமக்கல் கவிஞர்

❖ கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது - நாமக்கல் கவிஞர்

❖ கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக் கொள் - நாமக்கல் கவிஞர்

❖ அமிழ்தம் அவளுடைய மொழியாகும் அன்பே அவளுடைய வழியாகும் மானம் பெரிதென உயிர் விடுவார் - நாமக்கல் கவிஞர்

❖ தமிழன் என்றோர் இனமுண்டு தனியே அவர்க்கோர் குணமுண்டு - நாமக்கல் கவிஞர்

❖ பாட்டாளி மக்களது பசி தீர வேண்டும் பணமென்ற மோகத்தின் விசை தீர வேண்டும் - நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கம் பிள்ளை

❖ சூதினும் சூதானது யாதெனிள் சூதினும் சூதே சூதா னது - பம்மல் சந்மந்தனார்

❖ எதையும் தாங்கும் இதயம் வேண்டும் - அறிஞர் அண்ணா

❖ கடமை, கண்ணியம். கட்டுப்பாடு - அறிஞர் அண்ணா

❖ மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மணமுண்டு - அறிஞர் அண்ணா

❖ உச்சிமலையிலே ஊறும் அருவிகள் ஒரே வழியில் கலக்குது ஒற்றுமையில்லா மனித குலம் உயர்வு தாழ்வு வளக்குது - பட்டுக்கோட்டை கலியாணசுந்தரனார்

❖ செய்யும் தொழிலே தெய்வம் - அந்தத் திறமைதான் நமது செல்வம் - பட்டுக்கோட்டை கலியாணசுந்தரனார்                                                                                                                

❖ வீறுடை செம்மொழி தமிழ்மொழி உலகம் வேரூன்றிய நாள் முதல் உயிர் மொழி - பாவலரேறு பெருஞ்சித்திரனார்

❖ ஏர்முனைக்கு நிகரிங்கே எதுவுமில்லை - மருதகாசி

❖ செந்தமிழ்ச் சொல்லெடுத்து இசை தொடுப்பேன் வண்ணச் சந்தத்திலே கவிதைச் சரம் தொடுப்பேன் - கண்ணதாசன்

❖ எல்லோரும் எல்லாமும் பெற வேண்டும் இங்கு இல்லாமை இல்லாத நிலை வேண்டும் - கண்ணதாசன்

❖ நான் நிரந்தரமானவன் அழிவதில்லை எந்த நிலையிலும் எனக்கு மரணமில்லை - கண்ணதாசன்

❖ போற்றுவோர் போற்றட்டும் புழுதிவாரி தூற்றுவோர் தூற்றட்டும் தொடர்ந்து சொல்வேன் ஏற்றதொரு கருத்தை என்துள்ளம் என்றால் எவர்வரினும் நில்லேன் அஞ்சேன் - கண்ணதாசன்

❖ ஆங்கிலமோ பிறமொழியோ பயின்றுவிட்டால் அன்னைமொழி பேசுதற்கு நாணுகின்ற தீங்குடை மனப்போக்கர் வாழும் நாட்டில் தென்படுமோ மொழியுணர்ச்சி! - முடியரசன்

❖ நான் தனியாக வாழவில்லை. தமிழோடு வாழ்கிறேன் - திரு.வி. கலியாண சுந்தரனார்

❖ பனை மரத்திலிருந்து விழுந்து பிழைத்தவனும் உண்டு வயல் வரப்பு வழுக்கி இறந்தவனும் உண்டு - பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர்

❖ ஆசையே துன்பத்திற்குக் காரணம் - புத்தர்

❖ கற்றுணை பூட்டி ஓர் கடலில் பாய்ச்சினும் நற்றுணை யாவது நமச்சிவாயவே - திருநாவுக்கரசர்

❖ என் கடன் பணி செய்து கிடப்பதே - திருநாவுக்கரசர்

❖ நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் ஏமாப்போம் பிணியறிவோம் பணிவோம் அல்லோம் - திருநாவுக்கரசர்

❖ குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும் - திருநாவுக்கரசர்

❖ அடியவர்க்கும், அடியவர்க்கும், அடியவர்க்கும் அடியேன் யான் - நம்மாழ்வார்

❖ வாழ்தல் வேண்டிப் பொய் கூறேன் : மெய் கூறுவல் - மருதனில் நாகனார்

❖ செல்வத்துப்பயனே ஈதல் - நக்கீரர்

❖ ஈயென இரத்தல் இழிந்தன்று அதனெதிர் ஈயேனென்றால் அதனினும் இழிந்தன்று கொள்ளெனக் கொடுத்தல் உயர்ந்தன்று அதனெதிர் கொள்ளேன் என்றல் அதனினும் உயர்ந்தன்று - கழைதின் யானையார் (புறநானூறு)

❖ கோல்நோக்கி வாழும் குடிபோல் இருந்தேன் - குலசேகர ஆழ்வார்

❖ செல்வத்துப் பயனே ஈதல் - நக்கீரர்

❖ நூல் பல கல் – ஒளவையார்

❖ இளமையில் கல் - ஒளவையார்

❖ நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு - ஒளவையார்

❖ முற்பகல் செய்யின் பிற்பகல் விளையும் - ஒளவையார்

❖ அணுவைத் துளைத்தேழ் கடலையும் குறுகத் தறித்தக் குறள் - ஒளவையார்

❖ திரைகடல் ஓடியும் திரவியம் தேடு - ஒளவையார்

❖ மீதூண் விரும்பேல் - ஒளவையார்

❖ இயல்வது கரவேல் - ஒளவையார்

❖ நாடாகு ஒன்றோ காடாகு ஒன்றோ எவ்வழி நல்லவர் ஆடவர் அவ்வழி நல்லை வாழிய நிலனே - ஒளவையார்

❖ ஈவது விலக்கேல் - ஒளவையார்

❖ எறும்பும் தன் கையால் எண்சாண் - ஒளவையார்

❖ கற்றது கைமண் அளவு கல்லாதது உலகளவு - ஒளவையார்

❖ மதியாதார் முற்றம் மதித்தொருகாற் சென்று மிதியாமை கோடியுறும் உண்ணீர் உண்ணீர் என்று ஊட்டாதார் தம்மனையில் உண்ணாமை கோடியுறும் கோடி கொடுத்தும் குடிப்பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடியுறும் கோடானு கோடி கொடுப்பினும் தன்னுடைய நாக்கோடாமை கோடியுறும் - ஒளவையார்

❖ காயுடை நெல்லொடு கரும்பு அமைத்துக் கட்டி அரிசி அவள் அமைத்துக் வாயுடை மறையவர் மந்திரத்தால் - ஆண்டாள்

❖ உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் - திருவள்ளுவர்

❖ நீரின்றி அமையாது உலகு - திருவள்ளுவர்

❖ பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும் - திருவள்ளுவர்

❖ நான் பெற்ற இன்பம் பெருக இவ்வையகம் - திருமூலர்

❖ உடம்பை வளர்த்தேன் உயிர் வளர்த்தேன் - திருமூலர்

❖ உடம்பார் அழியின் உயிரார் அழிவர் - திருமூலர்

❖ ஒன்றே குலம் ஒருவனே தேவன் - திருமூலர்

❖ உள்ளம் பெருங்கோயில் ஊனுடம்பு ஆலயம் - திருமூலர்

❖ என்னை நன்றாக இறைவன் படைத்தனன், தன்னை நன்றாகத் தமிழ் செய்யுமாறு - திருமூலர்

❖ வைதோரைக் கூட வையாதே - இந்த வையம் முழுதும் பொய்த்தாலும் பொய்யாதே - காடுவெளிச்சித்தர்

❖ முப்பால் அறிந்த முதற்பா விலர் ஒப்பார் எப்பா பலரினும் இல் – நல்லந்துவனார்

❖ கற்கை நன்றே கற்கை நன்றே பிச்சை புகினும் கற்கை நன்றே - அதிவீரராம பாண்டியன்

❖ திங்களைப் போற்றுதும் திங்களைப் போற்றுதும் ஞாயிறு போற்றுதும் ஞாயிறு போற்றுதும் மாமழை போற்றுதும் மாமழை போற்றுதும் - இளங்கோவடிகள்

❖ உற்றுழி உதவியும் உறுபொருள் கொடுத்தும் பிற்றைநிலை முனியாது கற்றல் நன்றே ஒரு குடிப் பிறந்த பல்லோருள்ளும் மூத்தோன் வருக என்னாது அவருள் அறிவுடை யோனா றரசும் செல்லும் என்று பாடியவர் - பாண்டியன் நெடுஞ்செழியன்

❖ பரணிக்கோர் ஜெயங்கொண்டான் - பலபட்டடைச் சொக்கநாதப் புலவர்

❖ தென்றமிழ் தெய்வப் பரணி - ஒட்டக்கூத்தர்

❖ தீதும் நன்றும் பிறர் தரவ வாரா - கணியன் பூங்குன்றனார்

❖ பொன்னுந் துகிரும் முத்தும் மன்னிய மாமலைப் பயந்த காமருமணியும் - புறநானுறு

❖ பசித்திரு, தனித்திரு, விழித்திரு - வள்ளலார்

❖ அருட்பெருஞ்சோதி தனிப்பெருங்கருணை - வள்ளலார்

❖ வாடிய பயிரைக் கண்ட போதெல்லாம் வாடினேன் - வள்ளலார்

❖ கண்மூடிப் பழக்கமெல்லாம் மண்மூடிப்போக வேண்டும் - வள்ளலார்

❖ ஒத்தாரும் உயர்ந்தாரும் தாழ்ந்தாரும் எவரும் ஒருமையுளர் ஆகி உலகியல் நடத்தல் வேண்டும் - வள்ளலார்

❖ உயிரிரக்கமே பேரின்ப வீட்டின் திறவுகோல் - வள்ளலார்

❖ சங்கடம் விளைவிக்கும் சாதியையும் மதத்தையும் தவிர்த்தேன் இவையெல்லாம் சிறுபிள்ளை விளையாட்டு - வள்ளலார்

❖ எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் எண்ணி உள்ளே - வள்ளலார்

❖ கண்ணில் கலந்தான் கருத்தில் கலந்தான்என் எண்ணில் கலந்தே இருக்கின்றான் - வள்ளலார்

❖ பெண்ணினுள் ஆணும், ஆணினுள் பெண்ணும் எண்ணுற வகுத்த அருட்பெருஞ்சோதி - வள்ளலார்

❖ மண்ணுலகத்திலே உயிர்கள் தாம் வருந்தும் வருத்தத்தை ஒரு சிறிதெனினும் கண்ணுற பார்த்தும் செவியுற கேட்டும் கணமும் நான் சகித்திட மாட்டேன் - வள்ளலார்

❖ கலையுணர்ந்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும் வழக்கமெல்லாம் மண்மூடிப் போக - வள்ளலார்

❖ உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசுவோர் உறவு களவாமை வேண்டும் - வள்ளலார்

❖ எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே யல்லாமல் வேறொன் றறியேன் பராபரமே – வள்ளலார்

❖ அன்பைப் பெருக்கி எனது ஆருயிரைக் காக்க வந்த இன்பப் பெருக்கே இறையே பராபரமே - வள்ளலார்

❖ ஓர் அணுவினைச் சதக்கூறிட்ட கோணினும் உளன் - கம்பர்

❖ உடம்பிடைத் தோன்றிற் றொன்றை அறிந்ததுன் உதிரமூற்றி அடல்உறச் சுட்டு வேறொர் மருந்தினால் துயரம் தீர்வர் - கம்பர்

❖ கண்டவர் விண்டிலர், விண்டவர் கண்டிலர் - ஸ்ரீராமகிருஷ்ண பரமஹம்சர்

❖ வாலெங்கே நீண்டு எழுந்த வல்லுகி ரெங்கே? நாலு காலெங்கே? ஊன் வடிந்த கண்ணெங்கே? - கவிகாளமேகம்

❖ நமக்கு தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் - பாரதியார்

❖ காக்கை குருவி எங்கள் ஜாதி - பாரதியார்

❖ காக்கைச் சிறகினிலே நந்தலாலா - பாரதியார்

❖ பெண் விடுதலை வேண்டும் - பாரதியார்

❖ என்று தணியும் இந்த சுதந்திர தாகம் - பாரதியார்

❖ எல்லோரும் இந்நாட்டு மன்னர் - பாரதியார்

❖ ஆயுதம் செய்வோம் நல்ல காகிதம் செய்வோம் ஆலைகள் வைப்போம் கல்விச் சாலைகள் வைப்போம் - பாரதியார்

❖ பெற்ற தாயும் பிறந்த பொன்னாடும் நற்றவ வானினும் நனிசிறந்தனவே - பாரதியார்

❖ ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு - பாரதியார்

❖ நமக்குத் தொழில் கவிதை நாட்டிற்கு உழைத்தல் - பாரதியார்

❖ தண்ணீர் விட்டா வளர்த்தோம் கண்ணீரால் காத்தோம் - பாரதியார்

❖ செப்புமொழி பதினெட்டுடையாள் எனில் சிந்தனை ஒன்றுடையாள் - பாரதியார்

❖ உழவுக்கும் தொழிலுக்கும் வந்தனை செய்வோம் - பாரதியார்

❖ பாரத நாடு பழம் பெரும் நாடு நீர் அதன் புதல்வன் இந்நினைவு அகற்றாதீர் - பாரதியார்

❖ யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவ தெங்கும் காணோம் - பாரதியார்

❖ சென்றிடுவீர் எட்டுத் திக்கும் கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர் - பாரதியார்

❖ காவிரி தென்பெண்ணை பாலாறு கண்டதோர் வையை பொருநை நதி - பாரதியார்

❖ கல்வி சிறந்த தமிழ்நாடு புகழ்க் கம்பன் பிறந்த தமிழ்நாடு – பாரதியார்

❖ நஞ்சையள்ளும் சிலப்பதிகாரம் என்றோர் மணி ஆரம் படைத்த தமிழ்நாடு - பாரதியார்

❖ யாமறிந்த புலவரிலே கம்பனைப்போல், வள்ளுவன் போல் இளங்கோவனைப்போல் பூமிதனில் யாங்கணுமே பிறந்ததில்லை - பாரதியார்

❖ வள்ளுவன் தன்னை உலகினுக்கே தந்து வான்புகழ் கொண்ட தமிழ்நாடு - பாரதியார்

❖ தனியொருவனுக்கு உணவிலை எனில் ஜகத்தினை அழித்திடுவோம் - பாரதியார்

❖ கம்ப நாடன் கவிதையிற் போல் கற்றோர்க்கு இதயம் களியாதே - பாரதியார்

❖ ஆயிரம் உண்டிங்கு சாதி எனில் அன்னியர் வந்து புகலென்ன நீதி - பாரதியார்

❖ பாருக்குள்ளே நல்ல நாடு நம் பாரத நாடு நாமிருக்கும் நாடு நமது என்பதறிந்தோம் - பாரதியார்

❖ காசிநகர்ப் புலவன் பாடும் உரைதான் காஞ்சியில் கேட்பதற்கோர் கருவி செய்வோம் - பாரதியார்

❖ வங்கத்தில் ஓடிவரும் நீரின் மிகையால் மையத்து நாடுகளில் பயிர் செய்குவோம் - பாரதியார்

❖ ஆடுவோமே பள்ளு பாடுவோமே ஆனந்த சுதந்திரம் அடைந்து விட்டோம் என்று - பாரதியார்

❖ வாழிய செந்தமிழ்! வுhழிய நற்றமிழர்! - பாரதியார்

❖ செந்தமிழ் நாடெனும் போதினிலே இன்பத் தேன் வந்துபாயுது காதினிலே - பாரதியார்

❖ பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியிற் பெயர்த்தல் வேண்டும் - பாரதியார்

❖ இறவாத புகழுடைய புது நூல்கள் தமிழ் மொழியில் இயற்றல் வேண்டும் - பாரதியார்

❖ வெள்ளிப் பனிமலையின்மீது உலாவுவோம் மேலைக் கடல் முழுதும் கப்பல் விடுவோம் - பாரதியார்

❖ தேடிச்சோறு நிதந்தின்று பல சின்னஞ்சிறு கதைகள் பேசி நான் வீழ்வேனென்று நினைத்தாயோ - பாரதியார்

❖ அறம் பெருகும் தமிழ் படித்தால், அகத்தில் ஒளி பெருகும் திறம் பெருகும் உரம் பெருகும் தீமைக் கெதிர் நிற்கும் - பெருஞ்சித்திரனார்

❖ கல்லைத்தான் மண்ணைத்தான் காய்ச்சித்தனர் குடிக்கத்தான் கற்பித் தானா? - இராமச்சந்திரக் கவிராயர்

❖ செத்தும் கொடுத்த சீதக்காதி - படிக்காசுப் புலவர்

❖ தமிழுக்கும் அமுதென்று பேர் - பாரதிதாசன்

❖ புதியதேர் உலகம் செய்வோம் - பாரதிதாசன்

❖ எங்கெங்கு காணினும் சக்தியடா – பாரதிதாசன்

❖ வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையமே - பாரதிதாசன்

❖ கொலை வானினை எடுடா வெகு கொடியோர் செயல் அறவே - பாரதிதாசன்

❖ இருட்டறையில் உள்ளதடா உலகம் சாதி இருக்கிறது என்பவனும் இருக்கின்றானே - பாரதிதாசன்

❖ கல்வி இல்லாத பெண் களர் நிலம் போன்றவள் - பாரதிதாசன்

❖ எங்கள் பகைவர் எங்கோ மறைந்தார் இங்குள்ள தமிழர்கள் ஒன்றாதல் கண்டே - பாரதிதாசன்

❖ திங்களோடும் செழும்பரிதி தன்னோடும் விண்ணோடும் உடுக்களோடும் மங்குன்கடல் இவற்றோடும் பிறந்த தமிழுடன் பிறந்தோம் நாங்கள் - பாரதிதாசன்

❖ வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே - பாரதிதாசன்

❖ அகர முதலி ஒன்றை நாளும் படித்து வருவாய் நகரிலாத சொற்கள் நினைவில் நன்கு பெறுவாய் - பாரதிதாசன்

❖ மழையே மழையே வா வா – நல்ல வானில் புனலே வா வா - இவ் வையத் தமுதே வா வா - பாரதிதாசன்

❖ தௌ;ளு தமிழ்நடை சின்னஞ்சிறிய இரண்டடிகள் இணையில்லை முப்பாலுக்கு இந்நிலத்தே - பாரதிதாசன்

❖ தொண்டு செய்து பழுத்தபழம் தூயதாடி மார்பில் விழும் மண்டைச் சுரப்பை உலகு தொழும் மனக் குகையில் சிறுத்தை எழும் - பெரியார் பற்றி பாரதிதாசன்

❖ உள்ளத் துள்ளது கவிதை இன்பம் உருவெடுப்பது கவிதை - கவிமணி தேசிய விநாயகம்பிள்ளை

❖ வெய்யிற்கேற்ற நிழலுண்டு வீசுதென்றல் காற்றுண்டு கையில் கம்பன் கவியுண்டு கலசம் நிறைய மதுவுண்டு - கவிமணி

❖ மங்கைய ராகப் பிறப்பதற்கே நல்ல மாதவஞ் செய்திட வேண்டு மம்மா - கவிமணி

❖ தோட்டத்தில் மேயுது வெள்ளைப்பசு அங்கே துள்ளிக் குதிக்குது கன்றுக்குட்டி - கவிமணி

❖ தேனிலே ஊறிய செந்தமிழின் சுவைதேறும் சிலப்பதிகாரம் - கவிமணி

❖ சாலைகளில் பல தொழில்கள் பெருக வேண்டும் சாலைகளிலே தமிழ் எழுந்து முழங்க வேண்டும் - கவிமணி

❖ கல்லைப் பிசைந்து கனியாக்கும் செந்தமிழின் சொல்லை மணியாகத் தொடுத்தவனும் நீதானோ - கவிமணி

❖ காலை மாலை உலாவி நிதம் காற்று வாங்கி வருவோரின் காலைத் தொட்டுக் கும்பிட்டு காலன் ஓடிப்போவானே – கவிமணி

❖ நாடக சாலையொத்த நற்கலாசாலை ஒன்று நீடுலகில் உண்டோ நிகழ்த்து - கவிமணி தேசிய விநாயகம் பிள்ளை


Post a Comment