TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST தேர்வில் கேட்க கூடிய கொரோனா பற்றிய தகவல்கள் மற்றும் அரசு அறிவித்த ஊரடங்கு சட்டங்கள் முழு விவரம் Group I,II, IV exams

தேர்வில் கேட்க கூடிய கொரோனா பற்றிய தகவல்கள் மற்றும் அரசு அறிவித்த ஊரடங்கு சட்டங்கள் முழு விவரம் Group I,II, IV exams




கொரோனா வைரஸ்
 (Covid - 19) 


* உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் முழு முடக்கத்தை ஏற்படுத்தியது. உலகம் முழுவதும்
கொரோனா வைரஸ் பெருமளவில் பாதிப்பை ஏற்படுத்தியது.இது பெரிய பொருளாதார சீரழிவை ஏற்படுத்தியுள்ளது.

* இதற்கு உலக சுகாதார நிறுவனம் (WHO) இதற்கு COVID-19 என பெயரிட்டுள்ளது.



நோய் கண்டுபிடிப்பு


* 2019, டிசம்பர் மாதத்தில் சீனாவில் வுகான் மாகாணத்தில் ஒருவர் மருத்துவரிடம்
சென்றார். அதிகப்படியான காய்சல் அதை தொடர்ந்து மூச்சுத்திணறல் அடிக்கடி உண்டாவதாக
தெரிவித்தார். தொடர்ந்து அந்த நோயாளியின் உடல் பலவீனம் அடைந்திருக்கிறது. இதே போன்று
மக்கள் தொடர்ந்து மருத்துவர்களிடம் வரும்போது ஒரு புதிய வைரஸ் தொற்று பரவி இருப்பதை
சீனா உணரத் தொடங்கியது. இது உறுதிசெய்யப்பட்ட நாள் டிசம்பர் 31, 2019


* இதைத் தொடர்ந்து உலக சுகாதார நிறுவனம் (WHO) உலக நாடுகளுக்கும்
மற்றும் மக்களுக்கும் தீவிரமாக விழிப்புணர்வை ஏற்படுத்தியது. கொரோனா
வைரஸ் உலகநாடுகளுக்கு பரவி பெரும் உயிர் சேதத்தை ஏற்படுத்தியது.



கொரோன வைரஸ்

* இந்த தொற்றுக்கு கொரோனா வைரஸ் குடும்பம் தான் காரணம் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

* ஏற்கனவே கொரோன வைரஸ் குடும்பத்தில் 6 வைரஸ்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில்
தற்போது கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது 7வது வைரஸாக அறிவிக்கப்பட்டுள்ளது

* இதற்கு Cov-2019 tar) COVID-19 என்று பெயரிடப்பட்டுள்ளது. இது RNA வைரஸ் ஆகும்

 * கொரோனா என்பது ஒரு வைரஸின் பெயரல்ல. அது ஒரு குடும்பத்தின் பெயர்,

*கொரோனா என்றால் லத்தீன் மொழியில் "மகுடம்" (கிரீடம்) என்று பொருள்.

* பந்து வடிவில் இருக்கும் கொரோனா வைரஸ்கள் மீது ஒரு குறிப்பிட்ட புரதங்களால் ஆன
கொம்புகள் உள்ளன.

* COVID-19 உடன் சேர்த்து மொத்தம் 7 கொரோனா வைரஸ்கள் உள்ளன. அவை



 
கொரோனா வைரஸ் குடும்பம்
1. HCOV-229E ---1960ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
2. HCOV-OC43 --- 1960ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
3. SARS COV----2003 ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டதுட
4. H COV-NL-63---2004 ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
5. HKOI--2005 ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
6. Mers-Cov-- -2012 ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.
7. nCov --- 2019ம் ஆண்டில் கண்டுபிடிக்கப்பட்டது.

 *இவற்றில் 229E, NL 63, OC43,HKO1 ஆகிய நான்கும் ஆபத்தற்ற சளி, காய்ச்சலை
உரமாக்கும், மற்ற மூன்றும் விலங்குகளை தாக்குபவைகளாக இருந்து பின்
மனிதர்களை கடுமையாக தாக்குகிறது.




தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு


* தமிழகத்தில் முதல் தொற்று மார்ச் 7,2020 அன்று கண்டறியப்பட்டது. (காஞ்சிபுரத்தில்)

* 13 மார்ச் 2020 தமிழக அரசு அனைத்து வர்த்தக நிறுவனம், பள்ளி, கல்லூரிகளை முடியது.

* 20 மார்ச் 2020 தமிழ்நாடு மற்ற மாநிலங்களின் இணைப்பு துண்டிக்கும் வகையில் மாநில எல்லைகளை மூடியது

* 22 மார்ச் 2020, ஒருநாள் நாடு முழுவதும் பொது ஊரடங்கு அறிவிக்கப்பட்டது.

* 24 மார்ச் 2020ல் நாடு முழுவதும் 144 தடை உத்தரவு அமல் படுத்தப்பட்டது.

* 25 மார்ச் 2020 கரோனா காரணமாக தமிழகத்தில் முதல் உயிரிழப்பு ஏற்பட்டது.

1 Comments

Post a Comment