TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Unit 9 - தமிழக அரசு பெற்ற விருதுகள் & அங்கிகாரங்கள் - Unit 9

Unit 9 - தமிழக அரசு பெற்ற விருதுகள் & அங்கிகாரங்கள் - Unit 9



தமிழ்நாடு அரசு பெற்ற விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்:


*ஒட்டுமொத்த செயல்திறன்மிக்க முதன்மை மாநிலமாக இந்தியாவில் இரண்டாவது முறையாக தமிழ்நாடு தேர்வு.


*கிருஷி கர்மன் விருதினை ஐந்து முறை பெற்று சாதனை.


*உடல்உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் தொடர்ந்து ஐந்து வருடங்களாக மிகச் சிறந்த மாநிலத்திற்கான விருது.


*ஊராட்சிகளில் மின்னாளுமை வலிமை படுத்துதல், குழந்தைகள் நேயம்,வலுவான கிராமசபை செயல்பாட்டிற்கான 12 தேசிய விருதுகள்.


*பெங்களூருவில் உள்ள பொது விவகாரங்கள் மையத்தின் அறிக்கையில் நல்ஆளுமையில் இரண்டாவது சிறந்த மாநிலமாகக் தேர்வு.


*பிராஸ்ட் அண்ட் சல்லிவன்(Frost &Sullivan) நிறுவன ஆய்வறிக்கையில் ஒட்டுமொத்த செயல்பாட்டில் இரண்டாவது இடத்தை தொடர்ந்து இரண்டாம் ஆண்டாக தமிழ்நாடு பெற்றுள்ளது.


*தாய்மார்கள் இறப்பு விகிதத்தை வெகுவாக குறைத்ததற்காக மத்திய அரசின் சிறந்த விருது.


* "பெண் குழந்தைகளை காப்போம் ,பெண் குழந்தைகளுக்கு கற்பிப்போம்"என்ற திட்டத்திற்கு மத்திய அரசின் சிறந்த விருது .


*தூய்மைபாரதம் திட்டத்தின் கீழ் தமிழ் நாட்டிற்கு சிறந்த மாநில விருது.


*பொது விநியோகத் திட்டத்தை கணினிமயமாக்கமைக்கு விருது.


*ஊரக வளர்ச்சித் துறையில் சிறப்பான செயல்பாட்டிற்கு 9 தேசிய விருதுகள்.


*மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் 4 சிறந்த தேசிய விருதுகள்.


*மாற்றுத்திறனாளிகளுக்கு அதிக கடன் உதவி வழங்கிய தமிழ்நாடு மாநில தலைமை கூட்டுறவு வங்கிக்கு தேசிய விருது.


*இணையவழி கற்றலில் முன்னோடி மாநிலத்திற்கான தேசிய விருது.


*மூத்த குடிமக்கள் சேவைகளுக்காக தேசிய விருது.


 *உணவுபாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணைய விருது.


*சென்னை அரசு பொது மருத்துவமனைக்கு உடல் உறுப்பு தானத்திற்கான சிறப்பு விருது.


*புதுப்பிக்கப்பட்ட எரிசக்தி துறைக்கு விருது.


*சாலைப் பாதுகாப்பின் சிறந்த செயல்பாட்டிற்காக மத்திய அரசின் விருது.


 *போக்குவரத்துகழகங்களின் சிறந்த செயல்பாட்டிற்காக 9 தேசிய விருதுகள்.


*உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாடு முதன்மை மாநிலம் .


* பர்கூர் மாட்டின ஆராய்ச்சி நிலையத்திற்கு தென் மண்டலத்திற்கான தேசிய காமதேனு விருது.


*தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்திற்கு முதுநிலை விருது.


* தமிழ்நாடு மீன்வள பல்கலைக்கழகம் தரவரிசையில் இந்தியாவிலேயே முதலிடம்.


*சத்தியமங்கலம்புலிகள் காப்பகத்திற்கு சிறந்த மேலாண்மைக்கான மத்திய அரசின் விருது.


*2018 ஆம் ஆண்டிற்கு மத்திய அரசின் தேசிய நீர் ஆதார விருது.


*2018 ஆம் ஆண்டிற்கு மத்திய அரசின் தூய்மையான நகரத்திற்கான "கவச் சர்வேசன்" விருது .


*மதுரை அருள்மிகு மீனாட்சி சுந்தரேஸ்வரர் ஆலயத் திற்கு "தூய்மையான புனிதத்தலம்"விருது.


*பழமை மாறாமல் திருப்பணி மேற்கொண்டதற்காக ஸ்ரீரங்கம்,அருள்மிகு அரங்கநாதர் சுவாமி ஆலயத்திற்கு யுனெஸ்கோ விருது.

1 Comments

Post a Comment