TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST Unit 9 - தமிழக சுகாதார துறை திட்டம், சேவை, உருவாக்கப்பட்ட வரலாறு - 9 Unit

Unit 9 - தமிழக சுகாதார துறை திட்டம், சேவை, உருவாக்கப்பட்ட வரலாறு - 9 Unit






தமிழகத்தில் சுகாதர        சேவைகளின் வரலாறு


* 1639 ஆம் ஆண்டு கிழக்கு இந்திய கம்பெனியின் நோயுற்ற படை வீரர்களை
குணப்படுத்துவதற்காக, முதல் ஆங்கிலேய மருத்துவமனை, ஏற்படுத்தப்பட்டதாக
நம்பப்படுகிறது,


* 1644 ஆம் ஆண்டு நவீன மருத்துவமனையின் துவக்கம் என்று அறியப்படுகிறது (ஒரு
சிறிய மருத்துவமனையாகத் துவங்கப்பட்டு, தற்போது சென்னை மருத்துவக்
கல்லூரியுடன் இணைந்த புகழ் வாய்ந்த அரசு பொது மருத்துவமனையாக வளர்ந்துள்ளது!


* 1835-ஆம் ஆண்டு நம் மாநிலத்தின் முதல் மருத்துவ கல்லூரியான சென்னை மருத்துவக்
கல்லூரி தொடங்கப்பட்டது,


* 1883-ஆம் ஆண்டு நோயாளிகளுக்கு சிகிச்சை ளிப்பதற்காக, அரசு மருத்துவமனையில்
ஒரு பல் மருத்துவ பிரிவு தொடங்கப்பட்டது.


* 1885-ஆம் ஆண்டு திருவல்லிக்கேணியில் கஸ்தூரிபா காந்தி மருத்துவமனை (கோஷா
மருத்துவமனை தொடங்கப்பட்டது.


* 1923-ஆம் ஆண்டில் பொது சுகாதாரம் மற்றும் நோய்த் தடுப்பு மருந்து இயக்ககம்
தொடங்கப்பட்டது,


* 1954-ஆம் ஆண்டு அடையார் புற்றுநோய் நிலையம் தொடங்கப்பட்டது.


* 1966-ஆம் ஆண்டில் மருத்துவக் கல்வித் துறை உருவாக்கப்பட்டது.


* 1981-ஆம் ஆண்டில் மருந்து கட்டுப்பாடு துறை உருவாக்கப்பட்டது. 


* 1981-ஆம் ஆண்டில்
மாநில சுகாதாரப் போக்குவரத்துத் துறை உருவாக்கப்பட்டது.


* 1983-ஆம் ஆண்டு குடும்ப நலத் துறை உருவாக்கப்பட்டது,


* 1986-ஆம் ஆண்டில் பார்வை இழப்பு தடுப்பு சங்கம் உருவாக்கப்பட்டது. 


* 1994-ஆம்
ஆண்டில் தமிழ்நாடு மருத்துவப் பணிகள் கழகம் உருவாக்கப்பட்டது,


* 1994 ஆம் ஆண்டில் தமிழ்நாடு மாநில எய்ட்ஸ் கட்டுப்பாடு சங்கம் உருவாக்கப்பட்டது.


* 1999-ஆம் ஆண்டில் மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் துறை உருவாக்கப்பட்டது,


* 2002-ஆம் ஆண்டில் திருத்திய தேசிய காச நோய் கட்டப்பட்டுத் திட்டம்
உருவாக்கட்பட்டது


* 2005-ஆம் ஆண்டில் மாநில நலவாழ்வு சங்கம் உருவாக்கப்பட்டது,


* 2008-ஆம் ஆண்டில் உடல் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைத் திட்டம் தொடங்கப்பட்டது.


*2011-ஆம் ஆண்டு உணவு பாதுகாப்பு துறை உருவாக்கப்பட்டது.


* 2013 ஆம் ஆண்டில் இந்திய அரசால் தேசிய நல்வாழ்வு குழுமம் தொடங்கப்பட்டது.

* 2016-தமிழ்நாடு உறுப்பு மாற்று ஆணைக்குழு உருவாக்கப்பட்டது.

Post a Comment