TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST 18/6/20 ஜூன் இந்து தமிழ் - தினமணி Exam துளிகள்

18/6/20 ஜூன் இந்து தமிழ் - தினமணி Exam துளிகள்






நடப்பு நிகழ்வுகள் 
ஜூன் 18:


*தனியார் துறையில் பணியாற்ற விரும்பும் இளைஞர்களின் வசதிக்காக தனியார் நிறுவனங்களை இணைத்து வேலை வாய்ப்புகளைப் பெற்றுத் தரும் நோக்கில் தமிழக அரசால் பிரத்தியோகமாக உருவாக்கப்பட்ட தனி இணையதளம் =www.tnprivatejobs.tn.gov.in. 
" தமிழ்நாடு தனியார் துறை வேலை இணையம் "என்ற இணையதளம் தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித்துறை சார்பில் வடிவமைக்கப்பட்டது.


*கரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் ஏழை மக்களுக்கு உதவி செய்யயும் வகையில் இந்தியாவுக்கு சீன தலைநகர் பீஜிங்கில் இயங்கி வரும் ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கி சுமார் ரூ.5714கோடி கடன் வழங்க ஒப்புதல் அளித்துள்ளது.


*COVID -19 ஆல் மோசமாக பாதிக்கப்பட்ட நோயாளிகளில் மூன்றில் ஒருவரின் உயிரை காக்கும் என்று ஆக்ஸ்போர்ட் பல்கலைக்கழக ஆய்வில் நிரூபிக்கப்பட்ட "டெக்ஸமெதாசோன்" மருந்தை நோய்க்கான சிகிச்சை மருந்தாக பிரிட்டன் அரசு அங்கீகரித்துள்ளது. மிகவும் மலிவான ஊக்க மருந்தான டெக்ஸமெதாசோன் கரோனா நோய்க்கான உலகின் முதல் சிகிச்சை மருந்தாக கருதப்படுகிறது.


* சிவகங்கை மாவட்டம் ,திருப்புவனம் அருகே அகரத்தில் மேற்கொள்ளப்படும் அகழாய்வில் தங்க நாணயம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. 

ஒரு செண்டிமீட்டர் அளவுள்ள இந்த நாணயத்தின் எடை 300 மில்லி கிராம் ஆகும். நாணயத்தின் ஒரு பக்கத்தில் நாமம் போன்றும் நடுவில் சூரியன் அதன் கீழே சிங்க உருவம் காணப்படுகிறது .நாணயத்தின் மற்றொரு பக்கத்தில் 12 புள்ளிகள் உள்ளன.அதற்கு கீழ் இரண்டு கால் மற்றும் இரண்டு கைகளுடன் கூடிய உருவம் காணப்படுகிறது. இந்த நாணயம் கி.பி பதினேழாம் நூற்றாண்டில் தொடக்கத்தில் இருந்திருக்கலாம் என்று அறியப்படுகிறது. இந்த நாணயம் "வீரராயன் பணம் "என்று ஆய்வாளர்களால் அழைக்கப்படுகிறது.

Post a Comment