TNPSC EXAM துளிகள், தினசரி நடப்பு நிகழ்வுகள், ONLINE FREE TESST 17/6/20 ஜுன் இந்து தமிழ் - தினமணி Exam துளிகள்

17/6/20 ஜுன் இந்து தமிழ் - தினமணி Exam துளிகள்





  நடப்பு நிகழ்வுகள் 
  ஜூன் 17:

*சீனாவுக்கான இந்திய தூதர்: விக்ரம் மிஸ்ரி

*தமிழகத்தில் ஈரோடு, தர்மபுரி,திருநெல்வேலி உள்ளிட்ட 15 மாவட்டங்களில் தேசிய குழந்தை தொழிலாளர் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. இந்த மாவட்டங்களில் 290 சிறப்பு பள்ளிகள் செயல்பட்டு வருகின்றன .சுமார் 6000 குழந்தைகள் படித்து வருகின்றனர்.

* ஆங்கிலேயர்களுக்கு எதிராக மருதுபாண்டியர்களின் போர்ப் பிரகடனம் செய்த நாள் ஜம்புத் தீவு பிரகடன தினமாக அழைக்கப்படுகிறது.

* 2019 ஆம் ஆண்டில் அதிக அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்த்த நாடுகள் பட்டியலில் இந்தியா 9-வது இடத்தில் உள்ளது. 2018 ஆம் ஆண்டில் உலகளவில் இந்தியா 12வதுஇடத்தில் இருந்தது.

*உலகின் மூன்றாவது பெரிய எண்ணெய் நுகர்வு நாடு =இந்தியா

*சர்வதேச மேலாண்மை வளர்ச்சி நிறுவனம் ஆண்டுதோறும் வெளியிட்டு வரும் தொழில் நிறுவனங்களுக்கான புதிய வாய்ப்புகள் காணப்படுவதை அளவிடும் உலக போட்டி திறன் குறியீட்டில் நடப்பாண்டில் இந்திய 43 வது இடத்தை பிடித்துள்ளது. மொத்தம் கணக்கிடப்பட்ட 63 நாடுகளில் சிங்கப்பூரும் முதலிடத்தை பிடித்துள்ளது. அமெரிக்க 10வதுஇடத்திலும்,சீனா20வது இடத்திலும், ரஷ்யா 50வது இடத்திலும்,பிரேசில் 56 வது இடத்திலும் உள்ளன.

* நேபாளத்தின் புனிதத் தலமாகக் கருதப்படும் பசுபதிநாதர் கோவில் வளாகத்தில் ரூபாய் 2.33 கோடி செலவில் தூய்மை வசதிகளை ஏற்படுத்தித்தர இந்தியாஉறுதியளித்துள்ளது. நேபாளத்தில் பாகமதி ஆற்றின் இருபுறமும் அமைந்துள்ள பசுபதிநாதர் கோயில் அந்நாட்டின் மிகப்பெரிய கோயில் வளாகம் ஆகும். யுனெஸ்கோவின் உலக பாரம்பரிய மிக்க தலங்களின் பட்டியலில் இக்கோயில் இடம்பெற்றுள்ளது.

* சிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருகே அகரத்தில் நடைபெற்ற அகழ்வாய்வில் மண்பானைகண்டெடுக்கப்பட்டது.இப்பானை 2,500 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதர்கள் பயன்படுத்தியது என தொல்லியல் ஆய்வாளர்கள் தெரிவித்தனர்.

* மனிதவள மேம்பாட்டுத்துறை "நிஷாங்-2020"என்ற கல்வி நிறுவனங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகம் தேசிய அளவில் 5வது இடத்தைப் பெற்றுள்ளது ,உயர்கல்வி நிறுவனங்களில் இப்பல்கலைக்கழகம் 77 வது இடத்தைப் பெற்றுள்ளது.

* கரோனா ஊரடங்கால் தமிழகத்தில் உள்ள மாவட்ட நீதிமன்றம் சிறையிலிருந்து கைதி காணொளிக்காட்சி விசாரணையில் தண்டனை வழங்கி தீர்ப்பளித்த முதல் நீதிமன்றம் =மதுரை மாவட்ட இரண்டாவது கூடுதல் போதை பொருள் தடுப்பு சிறப்பு நீதிமன்றம்.

Post a Comment